நாளை முதல் 3 நாட்கள் கிண்டி காந்தி மண்டபம் பாலம் ஒரு வழிப்பாதையாக இயங்குமென அறிவிப்பு
|போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை,
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டூர்புரம் போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள காந்தி மண்டபம் பாலம் 'பீக் அவரில்' ஓ.எம்.ஆர். மற்றும் அடையார் செல்லும் வாகனங்களால் மத்திய கைலாஷ் முதல் தாலுக் ஆபிஸ் ரோடு வரை அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தேக்கமடைவதால் 3 நாட்கள் சோதனை ஓட்டமாக 21-ந்தேதி (நாளை) காலை 9 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து சீராக செல்ல கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
* கிண்டி காந்தி மண்டபம் பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
* ஓ.எம்.ஆர் மற்றும் அடையாரில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் காந்தி மண்டபம் பாலம் அடைக்கப்பட்டு காந்தி மண்டபம் சர்வீஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.