< Back
மாநில செய்திகள்
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு
மாநில செய்திகள்

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Oct 2023 1:53 PM IST

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார்.

இதில் 13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது. காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

மேலும் செய்திகள்