< Back
மாநில செய்திகள்
ஆக.1-ல் ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும் என அறிவிப்பு
மாநில செய்திகள்

ஆக.1-ல் ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும் என அறிவிப்பு

தினத்தந்தி
|
24 July 2023 7:18 PM IST

கொடநாடு கொலை வழக்கில் தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தவுள்ளார்.

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், மாநில அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஓ,பன்னீர்செல்வம் தரப்பு நடத்தும் போராட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் அமமுக பங்கேற்கும் அக்கட்சி அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்