< Back
மாநில செய்திகள்
ரெயில் விபத்தைத் தவிர்த்த மதுரை ரெயில்வே கோட்ட ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு
மாநில செய்திகள்

ரெயில் விபத்தைத் தவிர்த்த மதுரை ரெயில்வே கோட்ட ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு

தினத்தந்தி
|
15 Dec 2023 7:03 AM IST

தெற்கு ரெயில்வே அளவில் 6 ரெயில்வே ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேசிய விருது பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மதுரை,

ரெயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் 'அதிவிசிஸ்ட் ரெயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு இந்த விருதுக்கு இந்திய அளவில் 100 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தெற்கு ரெயில்வே அளவில் 6 ரெயில்வே ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேசிய விருது பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். மதுரை கோட்டம் மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பாதை பராமரிப்பு பணியாளராக உள்ள வீரபெருமாள் என்பவர் ரெயில் பாதையில் விரிசல் இருப்பதை அறிந்து விபத்தை தடுத்ததற்காக தேசிய விருது பெற இருக்கிறார்.


மேலும் செய்திகள்