'த.வெ.க. மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்' - புஸ்ஸி ஆனந்த்
|த.வெ.க.வின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் முறைப்படி பத்திரிக்கையில் வெளியிட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநாடு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு தொடர்பான பணிகள் முடிந்த பின்னர் த.வெ.க. தலைவர் விஜய்யின் கவனத்திற்கு அதை கொண்டு சென்று விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம்" என்று தெரிவித்தார்.