< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
சாந்தநாத சாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
|3 July 2022 12:25 AM IST
சாந்தநாத சாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
புதுக்கோட்டை டவுனில் பிரசித்தி பெற்ற சாந்தநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தையொட்டி கோவிலில் சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 5-ந் தேதி ஆனி திருமஞ்சனத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. திருவிழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.