< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
15 Jun 2022 11:37 PM IST

சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்,

வேலாயுதம்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் பிரசித்தி பெற்ற மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமர வைத்து கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். இதேபோல் காகிதபுரம் காசி விஸ்வநாதர், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம் மணி கண்டேஸ்வரர், நன்னீர் சவுந்திரநாயகி உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்