< Back
மாநில செய்திகள்
அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
16 Sept 2022 12:27 AM IST

அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பஸ் நிலைய வாயிலில் இருந்து மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர் அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர செயலாளர் முருகேசன், நகராட்சி தலைவர் சாந்தி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாங்காய் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்துடன் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் தேரடி, மார்க்கெட் தெரு வழியாக ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் செந்தில் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சுத்தமல்லி பிரிவு சாலையில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், அசோகன் ஆகியோர் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முன்னதாக தா.பழூர் கடைவீதியில் அமைதி ஊர்வலம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தா.பழூர் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி வீர மணிகண்டன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் தி.மு.க. நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையிலும், அ.தி.மு.க. நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட துணைச் செயலாளருமான ராமஜெயலிங்கம் தலைமையிலும் ஜெயங்கொண்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்