ராணிப்பேட்டை
அண்ணா பிறந்த நாள் விழா
|நெமிலி, காவேரிப்பாக்கம் ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெமிலி
நெமிலி பஸ் நிலையத்தில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமையில் நடைபெற்றது. அப்போது அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், நகர செயலாளர் ஜனார்த்தனன், சயனபுரம் ஊராட்சி மன்றதலைவர் பவானி வடிவேலு, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வடகண்டிகை பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமை தாங்கினார். அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், அவைத்தலைவர் நரசிம்மன், வக்கீல்கள் கார்த்திகேயன், வெங்கடேசன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பனப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வி.எஸ்.ஏ. குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஓச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி பாலாஜி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.