< Back
மாநில செய்திகள்
அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
16 Sept 2022 12:47 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அண்ணா பிறந்தநாள்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று நாமக்கல்லில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி மோகனூர் சாலையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.பி.ஆர்.சுந்தரம், மாநில நிர்வாகிகள் நக்கீரன், மணிமாறன், நகராட்சி தலைவர் கலாநிதி, நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காந்தி என்கிற பெரியண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே துத்திகுளம் பஸ் நிறுத்தத்தில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொன்னுசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அப்போது பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், ஒன்றிய சேர்மன் மணிமாலா சின்னுசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வி.பி.ராணி, ஒன்றிய துணை செயலாளர் திராவிட மணி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் ஆனந்த் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தி.மு.க,வினர் பரமத்திவேலூர் நான்கு ரோட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. பிரமுகர் கண்ணன் தி.மு.க கொடியை ஏற்றி வைத்து அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் மாரப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட அரசு சிறப்பு வக்கீல் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோகனூர்

மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மணப்பள்ளியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.பி.ஆர்.சண்முகம் தலைமை தாங்கினார். மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் பொன்னுச்சாமி, கோவிந்தராஜ், செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவா ஆகியோர் முன்னிலை வசித்தனர். அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஓலப்பாளையம் முன்னாள் ஊராட்சி செயலாளர் மயில்சாமி, ஒன்றிய கிளை கழக சார்பு மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்