< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அண்ணாவின் 54வது நினைவு தினம்: சென்னையில் இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி
|3 Feb 2023 7:11 AM IST
முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை,
முன்னாள் தமிழ் நாடு முதல் அமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.