< Back
மாநில செய்திகள்
கவர்னருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: டெல்லியில் இன்று அமித்ஷாவையும் சந்திக்கிறார்
மாநில செய்திகள்

கவர்னருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: டெல்லியில் இன்று அமித்ஷாவையும் சந்திக்கிறார்

தினத்தந்தி
|
22 Feb 2023 12:39 AM IST

கவர்னரை நேற்று சந்தித்த நிலையில் டெல்லியில் இன்று அமித்ஷாவையும் அண்ணாமலை சந்திக்கிறார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை திடீரென கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை குறித்தும், தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் பேசியதாக தெரிகிறது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நடைபெற்று வரும் விதிமீறல்கள் குறித்தும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை டெல்லி செல்லும் அண்ணாமலை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசுகிறார்.

மேலும் செய்திகள்