< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சி: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சி: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

தினத்தந்தி
|
27 July 2023 9:25 PM IST

பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கிறார்.

சென்னை,

'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.

இந்த நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அதிமுக கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்