< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு சாதனை
கடலூர்
மாநில செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு சாதனை

தினத்தந்தி
|
14 Jun 2023 12:15 AM IST

திருக்கை மீனில் உயிர் காக்கும் மருத்துவ மூலக்கூறுகள் அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு சாதனை

பரங்கிப்பேட்டை

திருக்கை மீனில் உயிர் காக்கும் மருத்துவ மூலக்கூறுகளை பிரித்து எடுக்கும் முறையை கண்டுபிடித்துள்ளமைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புலத்துக்கு ஜெர்மனி நாட்டின் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடல் வாழ் உயிரினங்கள் உணவாக மட்டும் இன்றி உயிருக்கு தேவையான மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. அந்தவகையில் கடல்வாழ் உயிரினமான திருக்கை மீனில் இருந்து முக்கிய மருத்துவ மூலக்கூறுகளை பிரித்து எடுத்து சாதனை புரிந்திருக்கின்றனர் அண்ணாமலைப் பல்கலைக்கழக, கடல் அறிவியல் புல பேராசிரியர் முனைவர் எம்.ஆறுமுகம் மற்றும் அவருடைய ஆராய்ச்சி குழுவினர்.

பொதுவாக திருக்கை மீன்கள் கடும் விஷமுடைய நீண்ட முட்களை கொண்டுள்ளது. மேலும் இம்மீன்களில் உள்ள முட்களை நீக்கிவிட்டு உணவுக்காக அதனை பயன்படுத்துகிறார்கள். இந்த முட்களில் இருந்து பெறப்படும் மருந்து பொருட்கள் ரத்தம் உறைதலை தடுக்கவும், கேன்சர் செல்களை அழிக்கும் மருந்தாகவோ பயன்படுத்தமுடியும். மேலும் இதன் மூலக்கூறுகளில் இருந்து ஆற்றல் மிக்க வலி நிவாரணியை உருவாக்க முடியும்.

இது சம்பந்தமாக உலகளாவிய அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி உதவி அளித்துள்ளது. இதை அடுத்து பேராசிரியர் ஆறுமுகம், ஆராய்ச்சி மாணவி எஸ்.உத்ரா உள்ளிட்ட ஆராய்ச்சி குழுவினர்களை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் பேராசிரியர் ஆர்.சிங்காரவேல், கடல் அறிவியல் புல முதல்வர் மற்றும் இயக்குனர் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்