< Back
மாநில செய்திகள்
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு அண்ணாமலை, எல்.முருகன் நேரில் ஆறுதல்..!
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு அண்ணாமலை, எல்.முருகன் நேரில் ஆறுதல்..!

தினத்தந்தி
|
17 Nov 2022 4:17 PM IST

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினர்.

சென்னை,

சென்னையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நவடிக்கை எடுக்க வேண்டும். பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது. பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.

பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார். முதல் அமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது. இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்