< Back
மாநில செய்திகள்
சீமானை கட்டித்தழுவிய அண்ணாமலை
மாநில செய்திகள்

சீமானை கட்டித்தழுவிய அண்ணாமலை

தினத்தந்தி
|
28 July 2024 9:55 AM IST

புத்தக வெளியீட்டு விழாவில் சீமானை பாஜக தலைவர் அண்ணாமலை கட்டித்தழுவினார்.

கோவை,

கோவை நீலாம்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு எழுதிய சுயசரிதை புத்தகம் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்க வந்த அண்ணாமலை அங்கு நின்று இருந்த சீமானை பார்த்ததும் அருகே சென்று அவரை கட்டி அணைத்து ஆறத் தழுவி அன்புடன் பேசிவிட்டு சென்றார்.

அரசியலில் இரு கட்சியினரும் எதிர் எதிர் கருத்துக்கள் முன்வைத்த நிலையில் புத்தகம் வெளியீட்டு விழாவில் ஒருவரை ஒருவர் ஆறத் தழுவியது அங்கு இருந்தவர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்துடன் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்