< Back
மாநில செய்திகள்
மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே கவர்னரிடம் அண்ணாமலை புகார் கொடுத்துள்ளார் - ஆர்.எஸ் பாரதி பேட்டி
மாநில செய்திகள்

மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே கவர்னரிடம் அண்ணாமலை புகார் கொடுத்துள்ளார் - ஆர்.எஸ் பாரதி பேட்டி

தினத்தந்தி
|
26 July 2023 8:43 PM IST

அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம் என ஆர்.எஸ் பாரதி கூறினார்.

திருச்சி.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது ,

மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே கவர்னரிடம் அண்ணாமலை புகார் அளித்துள்ளார். திமுகவினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம்.அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. இந்த புகாரால் மக்கள் அண்ணாமலைக்கு வேறு வேலையே இல்லையா என நினைப்பார்களே தவிர, திமுகவிற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது. நாங்கள் எதையும் சந்திக்க தயார்.

பிரச்சனைகளை திசை திருப்ப அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம். என கூறினார்.

மேலும் செய்திகள்