< Back
மாநில செய்திகள்
சீரடி சாய்பாபா கோவிலில் அன்னதானம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சீரடி சாய்பாபா கோவிலில் அன்னதானம்

தினத்தந்தி
|
17 Feb 2023 12:30 AM IST

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் அன்னதானம் நடந்தது.

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று வியாழக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. முன்னதாக பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவற்றால் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கைகளாலே விபூதி அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விளக்கேற்றி சாய்பாபாவை வழிபாடு செய்ததோடு, பஜனையில் பங்கேற்று பாடல்கள் பாடினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்