< Back
மாநில செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம்
அரியலூர்
மாநில செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம்

தினத்தந்தி
|
6 Nov 2022 7:13 PM GMT

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) 100 மூட்டை பச்சரிசியால் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

பிரகதீஸ்வரர் கோவில்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லினால் ஆன சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (திங்கட்கிழமை) பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த 5-ந் தேதி காலை 5 மணியளவில் கணக்க விநாயகருக்கு அபிஷேகமும் தீபாராதனையும், நேற்று காலை 9 மணிக்கு பிரகன் நாயகி அம்பாளுக்கும், பிரகதீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட 21 வகையான மகா அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது.

அன்னாபிஷேகம்

இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசியால் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் பிரகதீஸ்வரர் மேல் சாத்தப்பட்ட அன்னத்தின் மீது பலகாரங்கள் செய்து சாதத்தின் மேல் அழகாக அடுக்கி மலர் அலங்காரம் செய்து மாலை 6 மணியளவில் மகாதீபாராதனையும், இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணத்தையொட்டி காலை 10.30 மணிக்குள் ருத்திரா அபிஷேகமும், சண்டிகேஸ்வர பூஜையும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்