< Back
மாநில செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

தினத்தந்தி
|
8 Nov 2022 6:45 PM GMT

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கம் முன்பாகவும், சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பதும் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. சிவலிங்கத்திற்கு தினசரி ஆறுகால அபிஷேக ஆராதனைகளும், மணக்கோலத்தில் உள்ள சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் ஆண்டுக்கு ஒருமுறை அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். இந்த சந்தனகாப்பு அலங்காரம் அடுத்த ஆண்டு தான் களையப்பட்டு மீண்டும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட சாதம் களையப்பட்டு, அதில் ஒரு பகுதியை எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதிக் கடல் என்னும் வேதநதியில் கரைக்கப்பட்டது. பின்னர் மீதம் உள்ள சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக பிச்சாடனார் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடந்தது. இதேபோல நாகையை அடுத்த நாகூரில் காங்கேய சித்தர் ஜீவசமாதி பீடம் உள்ளது. இந்த சித்தர் பீடத்தில் உள்ள சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.

மேலும் செய்திகள்