தேனி
ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம்
|சுருளி அருவி பகுதியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.
கூடலூர் அருகே சுருளி அருவி பகுதியில் ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று, சிவபெருமானுக்கு அன்னாபிேஷக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலவருக்கு தண்ணீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிவபெருமான், நந்தி சிலை மீது, சாதத்தை பக்தர்கள் அன்னாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள உணவு நீர்வாழ் உயிர்களுக்காக சுருளி அருவியிலும், முல்லைப்பெரியாற்றிலும் கரைக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.