< Back
மாநில செய்திகள்
அண்ணா நினைவு தினம்
தேனி
மாநில செய்திகள்

அண்ணா நினைவு தினம்

தினத்தந்தி
|
4 Feb 2023 12:15 AM IST

தேனி நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தேனி நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தின நிகழ்ச்சி தேனி நேரு சிலை சிக்னல் அருகில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நாராயணபாண்டியன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்துகொண்டு அண்ணா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில், பெரியகுளம் எம்.எல்.ஏ, சரவணக்குமார் மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்