< Back
மாநில செய்திகள்
இந்தியாவின் மாநில அரசியல் களங்களில் தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் அண்ணாதான் - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

இந்தியாவின் மாநில அரசியல் களங்களில் தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் அண்ணாதான் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
15 Sept 2024 11:03 AM IST

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய நாட்டின் மாநில அரசியல் களங்களில் இன்றுவரை தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் நம் யுகத்திற்கான அரசியல் பாதையை வகுத்துத் தந்த அரசியல் பேராசான் அண்ணாதான் என்றால் மிகையாகாது.

"தமிழ்நாடு" என்று பெருமிதத்தோடு சொல்லும் போதெல்லாம் நம் நினைவில் வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை தீபம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் காண அண்ணா வழியில் அ.இ.அ.தி.மு.க. ஓயாது உழைக்க உறுதியேற்போம். அண்ணா நாமம் வாழ்க!" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருஉருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்