< Back
மாநில செய்திகள்
அண்ணா வெறும் பெயரல்ல.. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - கனிமொழி
மாநில செய்திகள்

'அண்ணா' வெறும் பெயரல்ல.. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - கனிமொழி

தினத்தந்தி
|
15 Sept 2024 10:27 AM IST

அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்