நாகப்பட்டினம்
அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
|நாகையில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெடுந்தூர ஓட்டப்போட்டி
அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே எற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாசாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகை மாவட்ட விளையாட்டுப் பிரிவால் 2023-24-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7- ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நடக்கிறது. இந்த போட்டிநாகை மீன்வள பொறியியல் கல்லூரியில் இருந்து தொடங்கி கங்களாஞ்சேரி சாலையில் முடிவடைகிறது.
2 பிரிவுகள்
இந்த நெடுந்தூர ஓட்டப்போட்டி 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் என 2 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாணவரல்லாதோர் மற்றும் பொதுமக்கள், கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் நாகை மாவட்டத்தைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
பரிசு தொகை
இந்தபோட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும், 4 முதல் 10-ம் இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.