< Back
மாநில செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை - டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
மாநில செய்திகள்

அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை - டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
5 Sept 2022 4:04 PM IST

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டெல்லி முதல்-மந்திரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார்.

சென்னை,

சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற "புதுமைப் பெண்" திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

விழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும், அதை கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டெல்லி முதல்-மந்திரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். பின்னர், அங்கு உள்ள பதிவேட்டில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து தனது கருத்தை பதிவிட்டார்.

அதில், அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல இந்தியாவின் பெருமை என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்