தென்காசி
அண்ணா நூற்றாண்டு விழா சைக்கிள் போட்டி
|தென்காசியில் அண்ணா நூற்றாண்டு விழா சைக்கிள் போட்டி நடந்தது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தென்காசியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் நேற்று நடைபெற்றது. போட்டியினை காலை 6-30 மணிக்கு ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த போட்டி 13, 15,17 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு மொத்தம் ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டியில் 458 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் மூன்று இடத்தை ஸ்ரீராம், பிரவீன், வைகுண்ட ராஜா ஆகியோரும், மாணவிகள் பிரிவில் ஹஸ்னா, ஐசிகா, வசந்தி சுருதிகா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பாஸ்கர், நித்தியானந்தன், முகமது ரயான் ஆகியோரும், மாணவிகள் பிரிவில் முகிதா, பவித்ரா, அபிநயா ஆகியோரும் பிடித்தனர்.17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ராஜபாண்டி, சந்தோஷ், கபீர் ஹிஜாப் முதல் மூன்று இடங்களையும், மாணவிகள் பிரிவில் ராகவி, புனிதா, மகி பவானி ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.1000, 4 முதல் 10-ம் பரிசாக ரூ.250 வழங்கப்பட்டது.