< Back
மாநில செய்திகள்
ஆஞ்சநேயர் வீதி உலா
அரியலூர்
மாநில செய்திகள்

ஆஞ்சநேயர் வீதி உலா

தினத்தந்தி
|
25 Dec 2022 12:25 AM IST

ஆஞ்சநேயர் வீதி உலா நடந்தது.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நேற்று காலை மீண்டும் லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலையில் மீண்டும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பால ஆஞ்சநேய சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்