< Back
மாநில செய்திகள்
கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்
கரூர்
மாநில செய்திகள்

கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
11 Oct 2023 11:31 PM IST

கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தரகம்பட்டி அருகே கீரனூர் ஊராட்சியில் கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.

கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து கால்நடைகள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சிறந்த 3 கன்றுகுட்டிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்