< Back
மாநில செய்திகள்
கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
13 Sept 2022 11:05 PM IST

மருதூர் கூட்டுறவு வங்கியில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக்காக ரூ.21 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். .துணைத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு வங்கியின் இயக்குனரும், தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான உதயம் முருகையன் விவசாயிகள் கடன் வழங்கினார். .மேலும், மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. இதில் வங்கியின் இயக்குனர்கள் இந்திராணி சுப்பிரமணியன், இந்திரா சுவாமிநாதன், மதியழகன், ராசேந்திரன், கோபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்