< Back
மாநில செய்திகள்
கால்நடை பராமரிப்பு முகாம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கால்நடை பராமரிப்பு முகாம்

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

அவரிக்காடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு முகாம் நடந்தது.

வேதாரண்யம்:

தலைஞாயிறு ஒன்றியம் அவரிக்காடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தமிழரசி கலந்துகொண்டு சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைசெல்வன் மற்றும் கால்நடை உதவி டாக்டர்கள் முருகேசன் சண்முகநாதன், பாலசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமிற்கு சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள், மருத்துவர் ராதா, கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்