< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
ஆனி திருமஞ்சன சிறப்பு வீதியுலா
|25 Jun 2023 11:37 PM IST
ஆனி திருமஞ்சன சிறப்பு வீதியுலா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, புத்தாடை உடுத்தி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கயிலாய வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது. பின்னர் வீதியுலா மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த சிறப்பு வீதியுலா சிவ தல யாத்திரை குழு திருக்கூட்டம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிவனடியார்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.