ஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்
|அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய 2வது நாளாக கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனி மாத பவுர்ணியை குரு பவுர்ணமி என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் சந்திரன் மிகப் பிரகாசமாக இருக்கும். மேலும் இந்தநாளில் கிரிவலம் செல்வது கூடுதல் நன்மையை அளிக்கும், ஞானமும், செல்வமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். எனவே, 14 கி.மீ. கிரிவலப்பாதையும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. 2வது நாளாக நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். குரு பவுர்ணமி என்பதால் பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. குறிப்பாக தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்தன.