< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: அங்கோலா நாட்டு செஸ் வீரர்கள் சென்னை வருகை
|26 July 2022 3:47 PM IST
சென்னை:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டி இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடைபெறுவது சிறப்புக்குரியதாகும்.
இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக அங்கோலா நாட்டு செஸ் வீரர்கள் தமிழகம் வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த வீரர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னத்திற்கு (தம்பி) அருகில் நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.