< Back
மாநில செய்திகள்
தம்பி மகளை அவதூறாக பேசியதால் ஆத்திரம்... நண்பரை அரிவாளால் வெட்டியவர் கைது
மாநில செய்திகள்

தம்பி மகளை அவதூறாக பேசியதால் ஆத்திரம்... நண்பரை அரிவாளால் வெட்டியவர் கைது

தினத்தந்தி
|
15 May 2024 11:11 PM IST

தம்பி மகளை அவதூறாக பேசிய நண்பரை, பெரியப்பா அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம், ஜோதி நகரைச் சேர்ந்த விநாயக மூர்த்தியும், பொன்னாங்கண்ணிமேடு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தியும் நண்பர்களாக பழகி வந்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று, மூர்த்தியின் சித்தப்பா மகன் மணிகண்டனின் வாகனத்தை, மந்தநகர் பகுதியில் வைத்து விநாயக மூர்த்தி தாக்கியுள்ளார். இதை தட்டிக் கேட்ட மணிகண்டனின் மகளையும் அவதூறாக பேசிய நிலையில், சிறுமி தனது பெரியப்பா மூர்த்திக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, விநாயக மூர்த்தியை சராமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த விநாயக மூர்த்தியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தில் இருந்து மூர்த்தி தப்பிச்சென்ற நிலையில், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்