< Back
மாநில செய்திகள்
வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரம்... கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரம்... கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

தினத்தந்தி
|
12 July 2024 7:45 AM IST

வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை அப்பன்திருப்பதி அருகே உள்ள வெள்ளியங்குன்றம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32 வயது). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மாலதி (28 வயது). இவர் கள்ளந்திரியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்வது செந்தில்குமாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். ஆனால் மாலதி அதை கேட்காமல் தினசரி வேலைக்கு சென்று வந்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாலதி, செந்தில்குமார் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதில் செந்தில்குமார் உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த நிலையில், அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 40 சதவீத காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார், மாலதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்