< Back
மாநில செய்திகள்
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை
மாநில செய்திகள்

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
28 May 2024 12:44 AM IST

பணத்தை திருப்பி கேட்டபோது சபரிக்கும், தாமசுக்கும் தகராறு ஏற்பட்டது.

குரோம்பேட்டை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ்.லட்சுமணன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (வயது 50). சொந்தமாக லாரி வைத்து தோல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவருக்கு இவர், ரூ.30 ஆயிரம் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கேட்டபோது சபரிக்கும், தாமசுக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு சபரி பணம் தருவதாக தாமசை அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாமஸ், சபரி சொன்னபடி திருநீர்மலை சாலையில் கருமாரியம்மன் கோவில் அருகே சென்றார். அப்போது சபரியும், அவருடன் இருந்தவர்களும் தாமசை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே தாமஸ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார், தாமஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சபரி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்