< Back
மாநில செய்திகள்
கொட்டும் மழையிலும் அங்கன்வாடி பணியாளர்கள்காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கொட்டும் மழையிலும் அங்கன்வாடி பணியாளர்கள்காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
27 April 2023 12:06 AM IST

கொட்டும் மழையிலும் அங்கன்வாடி பணியாளர்கள்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் இந்த போராட்டம் நீடித்தது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் நேற்று காலை மழை பெய்த நிலையிலும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் குடையை பிடித்தப்படி பங்கேற்றனர். இந்த நிலையில் மாநில நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கை நிறைவேற்றப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். புதுக்கோட்டையிலும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அப்போது கும்மியடித்து பாடி தங்களது போராட்ட வெற்றியை கொண்டாடினர்.

மேலும் செய்திகள்