< Back
மாநில செய்திகள்
தியாகதுருகத்தில்  அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தியாகதுருகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
15 Nov 2022 12:15 AM IST

தியாகதுருகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் புனிதவதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 6 மாதமாக நிலுவையில் உள்ள காய்கறி, சிலிண்டர், மளிகை ஆகிய பொருட்களுக்கு பணம் வழங்க வேண்டும். பயணப்படி வழங்க வேண்டும். போஷன் அபியான் திட்டத்தில் ஊக்கத்தொகையை அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 250 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்