< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 Sept 2022 12:06 AM IST

நாகர்கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் சரஸ்வதி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன், தலைவர் சிங்காரன், மாநில குழு உறுப்பினர் இந்திரா, பாலகிருஷ்ணன், அமுதா, சந்திரகலா, சரோஜினி உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்