< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
|22 Oct 2023 12:54 AM IST
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சுழி, நரிக்குடியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு தெரிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள், சி.ஐ.டி.யு. தலைவர் சாராள், ஒன்றிய கன்வீனர் சுரேஷ் குமார், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி இந்திராணி, அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து ெகாண்டனர்.