< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|13 Oct 2023 2:29 AM IST
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையை சேர்ந்த ஊழியர் அம்சவள்ளியின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர், திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் அகிலாண்டேஸ்வரி தலைமை தாங்கினார். பொருளாளர் ராணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சித்ரா விளக்கவுரையாற்றினார். ஊழியர் அம்சவள்ளியின் சாவிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், கொலை வழக்காக பதிவு செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.