< Back
மாநில செய்திகள்
அங்கன்வாடி, கூடுதல் வகுப்பறைகள் கட்ட அனுமதி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

அங்கன்வாடி, கூடுதல் வகுப்பறைகள் கட்ட அனுமதி

தினத்தந்தி
|
13 July 2022 7:13 PM GMT

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொள்ளலாம் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தலைவர் சூரியகுமார் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொள்ளலாம் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தலைவர் சூரியகுமார் தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், மாவட்ட ஊராட்சி கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு செயலாளர் பிச்சாண்டி முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

அங்கன்வாடி, வகுப்பறை கட்டிடம்

சரிதா (தி.மு.க.) எனது நிதியில் செய்யப்பட்ட பணிகளுக்கான நிதி தரப்படவில்லை.

தலைவர் சூரியகுமார்: பணிகள் முடிக்கப்பட்டிருந்தால் உடனடியாக பணிக்கான தொகை வழங்கப்பட்டு வருகிறது

தலைவர்: மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தங்களது பகுதிகளில் ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் அல்லது ரூ.11.78 லட்சத்தில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொள்ளலாம். அதற்கான இடத்தை தேர்வு செய்து தெரிவித்தால் கட்டிடம் கட்ட ஆணை வழங்கப்படும்.

செயலாளர் பிச்சாண்டி: முடிக்கப்பட்ட பணிகளை பொறியாளர்கள் பார்வையிட்டு பில்கள் மற்றும் அனைத்தும் அனுப்பினால் அன்றைய தினமே நிதி வழங்கப்பட்டு வருகிறது.

சுபாஷ்சந்திரபோஸ் (வி.சி.க.): கால்வாய் கட்ட இடம் தேர்வு செய்து, டெண்டர் வைக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் கட்ட முடியாது என பொறியாளர்கள் கூறுகிறார்கள்:

தலைவர்: தமிழக அரசு இதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரியால் தடையில்லா சான்று பெற்ற பிறகு அங்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் நிதி ஒதுக்கித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.

பூங்கா, நூலகம்

கே.ஏ.குணசேகரன் (தி.மு.க.): ஏலம்பட்டி பகுதியில் பைப் லைன் பணிகள் தொடங்கப்படவில்லை.

பொறியாளர்: இன்னும் பைப்புகள் வாங்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

தலைவர்: சிமெண்டு பைப்புகளை எந்த இடத்தில் வாங்க வேண்டும் என்று அரசு சொல்கிறதோ அங்குதான் வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு வாங்கி கொடுத்தால் பணிகள் தொடங்கப்படும். மாவட்ட ஊராட்சிக் குழு கட்டிடம் கட்ட திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை ெரயில்வே மேம்பாலத்தை கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கி விரைவில் புதிய கட்டிடம் மற்றும் நூலகம், பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை கந்திலி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ35 லட்சத்து 57 ஆயிரத்து 595 நிதி ஒதுக்கவும், கெஜல்நாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, சு.பள்ளிப்பட்டு, மட்ற பள்ளி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்