< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
அங்கன்வாடியில் பேரூராட்சி தலைவர் ஆய்வு
|18 Jun 2023 12:15 AM IST
ஆத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு தலைவன்வடலியில் உள்ள அங்கன்வாடியில் ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை தானும் உட்கொண்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுகிறதா? என்பதனையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் முருகன், 14-வது வார்டு உறுப்பினர் கேசவன் ஆகியோர் உடன் இருந்தனர்.