< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
|28 Jun 2022 9:23 PM IST
தேனியில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வனிதா, பொருளாளர் நாகலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 11 தீர்மானங்களை முன்வைத்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் இயக்குனர் அலுவலகத்திற்குள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.