விருதுநகர்
அங்கன்வாடி மையத்தில் அகர வரிசையில் வகுப்புகளை பிரிக்க கோரிக்கை
|அங்கன்வாடி மையத்தில் அகர வரிசையில் வகுப்புகளை பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையத்தில் அகர வரிசையில் வகுப்புகளை பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையம்
தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத்ராஜா கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் தாலுகா இனாம் ரெட்டியபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை இரண்டு வகுப்புகளாக பிரித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் வகுப்புகள் அகர வரிசையில் பிரிக்கப்படாத நிலை உள்ளது. சாதி பாகுபாட்டுடன் பிரிக்கப்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நிர்வாக வசதிக்காக வகுப்புகளாக பிரிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குழந்தைகளை அகரவரிசையில் இரண்டு வகுப்புகளாக பிரித்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
சாதி சான்றிதழ்
வெம்பக்கோட்டை தாலுகா டி.மேட்டூர் கிராமத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள 4,308 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் போது கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர பணி நியமனத்தின் போது முன்னுரிமை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.