கள்ளக்குறிச்சி
ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்
|கல்வராயன்மலையில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலையில் உள்ள மேல்வாழப்பாடி மலை கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், துணை தலைவர் பாஷா பி ஜாகிர் உசேன், உதவி பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். தொடர்ந்து வெள்ளிமலை பட்டறை கொட்டாய்பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தக்க தொட்டியையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கரியாலூர் சின்னத்தம்பி, வேங்கோடு கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தொரடிப்பட்டு செல்வராஜ், குண்டியா நத்தம் சீனிவாசன், பொட்டியம் அர்ச்சனா லட்சுமணன், ஆரம்பூண்டி ஆண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் மலர் ராஜ்குமார், மின்னல்கொடி சக்திவேல், பார்வதி அண்ணாமலை, செல்லதுரை மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.