< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்
|13 March 2023 12:15 AM IST
கூட்டேரிப்பட்டில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்துவைத்தார்
மயிலம்
மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு சந்தைமேடு வீதியில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜென்சி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன், கூட்டேரிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அருணாசுகுமார், மாவட்ட கவுன்சிலர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.