< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கொத்தனார் பயிற்சி பெற்ற பெண்களால் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம்

தினத்தந்தி
|
25 April 2023 12:15 AM IST

கொத்தனார் பயிற்சி பெற்ற பெண்களால் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் யூனியன் அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் மகளிர் சுய உதவிக்குழு பெண்களால் கட்டப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சசிகலா லிங்கம் தலைமையில் 30 பெண்கள் 2 மாதம் கட்டுமான தொழில் கொத்தனார் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியில் அனுபவமிக்க பயிற்றுனர்கள் மூலம் கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்டு உறை தயாரித்தல், ஹாலோ பிளாக்கல் தயாரித்தல் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது முதன் முறையாக புதிய கட்டிடத்தை பெண்களே கட்டி முடிக்கும் வகையில் தகுதி பெற்று உள்ளனர். தற்போது அங்கன்வாடி மையம் கட்டிடத்தை கட்டி வருகின்றனர். இதன் மூலம் ஆண்கள் மட்டுமே பார்த்து வந்த கட்டுமான பணியை பெண்களாலும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த மகளிர் குழுவினரை போல மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைத்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் யூனியன் ஆணையாளர்கள் ரமேஷ்குமார், சேவுகபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்