< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அங்காளம்மன் கோவில் திருப்பணி தொடக்கம்
|12 Dec 2022 1:00 AM IST
தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் திருப்பணி தொடங்கியது.
தர்மபுரி நகர் வெளிப்பேட்டை தெருவில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை அனுமதித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த கோவிலில் பிம்ப பாலாலயம் என்னும் திரு பணிகள் தொடக்க விழா நடந்தது. இதையொட்டி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் செல்வ முத்துக்குமாரசாமி தலைமையில் சிறப்பாக நடந்தது. பின்னர் திருப்பணிகள் தொடங்குவதற்கான பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.